திரு. தம்பிராஜா மனோகரன்

(ஓய்வு பெற்ற ஆசிரியர், அல் வுர்கான் முஸ்லீம் மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரிகொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் அல் அமினா பெண்கள் பாடசாலை மாலைதீவு)

தம்பிராஜா மனோகரன்

தோற்றம்: 24 மே 1950 - மறைவு: 15 ஏப்ரல் 2023

யாழ் வண்ணார்பண்ணை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தம்பிராஜா மனோகரன் அவர்கள் 15-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஓவசியர் தம்பிராஜா மனோன்மணி ஆகியோரின் அருமைப் புதல்வனும்,

காலஞ்சென்ற பாலசினேஸ்வரி (ஆசிரியை, பம்பலப்பிட்டி இந்நுக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், சிவசுப்பிரமணியம்,  சண்முகராஜா,  மற்றும் பவளரெத்தினம், சந்திரவதனா, லலித்தாராணி , மனோன்ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற நடராஜா செல்வநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நளனி (நம்போ, Business Unit Head Connex), வாஹினிப்பிரியா (Postdoctoral Research Fellow, USA) வின் பாசமிகு தந்தையும்,

முரளிதரன் (Research Data Analyst, USA)  மாமனாரும்,

உவகையின் அருமைத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 16-04-2023ம் தகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00  மணிமுதல் இரவு 8.00 மணிவரை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 17-04-2023ம் திகதி திங்கட்கிழமை பி.ப. 12.00 மணியளவில் நடைபெற்று பின்னர்
தகனக்கிரியைகள் கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2023 02:46)