திருமதி. தம்பிராஜா நிர்மலானந்தராணி (ராணி)
தோற்றம்: 28 மார்ச் 1948 - மறைவு: 08 ஆகஸ்ட் 2025
யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரம் வடக்கு பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், 10ஆம் வட்டாரம் கண்ணகைபுரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் - Montmagny ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராஜா நிர்மலானந்தராணி அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு இராசையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவசேனா (சுதா-பிரான்ஸ்), நதீஷன் (பிரான்ஸ்), சுபாஜினி (பிரான்ஸ்), தமிழினி (ராசாத்தி-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசம்பந்தர் (ஞானம் -பிரான்ஸ்), பத்மினி (பவானி -பிரான்ஸ்), இந்திரகுமாரன் (சுரேஷ் -பிரான்ஸ்), வித்தியானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தெய்வேந்திரம், இராசமணி, அன்னலிங்கம், மகாலிங்கம், சபாரெத்தினம், கதிர்காமலிங்கம், மற்றும் கமலாம்பாள் (கனடா), இராஜேஸ்வரி (கிளி- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, இராசம்மா, செல்லம்மா, சின்னம்மா, லெட்சுமி, நடேசு, பராசக்தி, மற்றும் பொன்னம்மா (கனடா), நல்லம்மா (கனடா), காலஞ்சென்றவர்களான தர்மபூபதி, புவனேஸ்வரி, பசுபதிப்பிள்ளை, கனகாம்பிகை, அரியநாயகம், மற்றும் அன்னலெட்சுமி, யோகேஸ்வரி, சிவபாதம், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அரியரத்தினம், கனகசபை, நடராசா, மனோன்மணி, துரைராஜா, சுப்பிரமணியம், வில்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
தீபிகன்- Camille, சயந்தன்- Julia, சுவேதா- கசியந்தன், இதழினி, அஜீதா, இனித்தா, நிதுஜன் ஆகியோரின் பாசமிகு ஆசை அம்மம்மாவும்,
நிவேதா, சாயித்தியன் ஆகியோரின் பாசமிகு ஆசை அப்பம்மாவும்,
Noan ஆதித்தியன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை, 12-08-2015 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-08-2025 புதன்கிழமை காலை 9:00 - 11:15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
