Mr. Thambu Aarumugam
(Retired Engineer)
Date of Birth: 24 December 1936 - Deceased: 17 December 2025
யாழ். அராலி மேற்கு கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, Lusaka / Zambia, Richmond, BC/Canada இனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு ஆறுமுகம் அவர்கள் 17-12-2025 அதிகாலை Vancouver இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தம்பு - மாணிக்கவல்லி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தில்லைநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, குமாரவேல், வள்ளிநாயகி, குழந்தைவேல் ஆகியோரின் சகோதரரும்,
கலாநிதி விஜயலட்சுமி, ஞானலட்சுமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
கலாநிதி அன்ட்று, கலாநிதி தேவநேசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-12-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் Hamilton Harron Funeral Home (5390 Fraser Street, Vancouver, BC. V5W 2Z1) இல் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
