திரு. தம்பு குணரத்தினம்
தோற்றம்: 10 செப்டம்பர் 1947 - மறைவு: 20 செப்டம்பர் 2021
யாழ் மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பு குணரத்தினம் அவர்கள் நேற்று 20-09-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்தங்கம் அவர்களின் புத்திரனும்,
காலஞ்சென்ற குணரத்தினம் புஸ்பராணியின் அன்புக் கணவரும்,
தனறூபன் (பிரான்ஸ்), பரதறூபனா (அமெரிக்கா), கிருஸ்ணறூபனா (லண்டன்), கஜறூபனா (பான் ஏசியா வங்கி), காலஞ்சென்ற செல்வறூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஜித்தா, விமலன், ஐங்கரன் ஆகியோரின் மாமனாரும்,
அக்சனன், டிவிசானி, தேவர்ஷி ஆகியோரின் பேரனும்,
அமராவதி, விசாலாட்சி, மகேஸ்வரி, பராசக்தி,காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சோதிப்பிள்ளை, செல்லம்மா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21-09-2021ம் திகதி செவ்வாய்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று முற்பகல் 9.30 மணியளவில் தகனக்கிரியைக்காக மாரீசன்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மகள்-கஜறூபனா : +94 77 656 9949
விலாசம்:-
மாரீசன்கூடல்
இளவாலை, யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2021 09:51)
