திரு. தம்பு புண்ணியமூர்த்தி
தோற்றம்: 25 ஏப்ரல் 1932 - மறைவு: 10 ஜூன் 2026
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா - Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு புண்ணியமூர்த்தி அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று கர்ணந்தோட்டக் கந்தனின் காலடியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - முதலியனாச்சி (கனகம்மா) தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான கல்யாணசுந்தரம், ராஜலக்ஷ்மி, சுப்புலக்ஷ்மி, ஸ்ரீபாலன் மற்றும் இரத்தினாம்பாள் , கிரிஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு ச்சகோதரரும்,
ஸ்ரீகரன், நந்தினி, விஜிகரன், சாந்தினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா, நவரட்ணராஜா (Joseph), அருணாநிதி, ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிலன், சாருஜன், அனுஜா, அஜந்தன், அபிஷா, மகிஷா, கோபிஷன், ஆகர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ராமலிங்கம், நித்தியானந்தன், செல்வராணி மற்றும் பரநிருபசிங்கம், ராஜேஸ்வரி, பிரேமா காலஞ்சென்ற பகவதி மற்றும் பரமேஸ்வரி, பத்மாவதி, பரிமளாதேவி, பரமகுருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநேசர், பாலசுந்தரமூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-06-2026 சனிக்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும், 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொாடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
