திரு. தம்பு ராஜேந்திரன்

(Cargo Boat Company - Shipping Razak & Co Ltd)

தம்பு ராஜேந்திரன்

தோற்றம்: 24 அக்டோபர் 1938 - மறைவு: 01 ஜூன் 2024

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிறெட்றிக்கா வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராஜேந்திரன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக்கணவரும்,

மகேந்திரன், விமலேந்திரன், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரி, நிரந்தரி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, வர்ஷா, வர்த்தனா, ஹர்ஷவர்த்தன், அஷ்விதன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தம்பிப்பிள்ளை, தர்மலிங்கம், பூரணம், விசாலாட்சி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவராஜா, தேவராஜா ஆகியோரினதும் கமலராணி, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, குணரத்தினராஜா, யமுனாராணி, நித்யானந்தராஜா ஆகியோரினதும் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியிலிருந்து பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-06-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியிலிருந்து கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2024 04:00)