திரு. தம்பு சண்முகராஜா
தோற்றம்: 20 ஏப்ரல் 1953 - மறைவு: 03 ஏப்ரல் 2025
யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சண்முகராஜா அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு - முத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன், வசீகரன், ஐஸ்வரியா, ஹம்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விதுனா, அருணா, லக்ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஜிதன், அக்ஷயா, அகரன், அனாமிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சரசம்மா, மின்னொளி மற்றும் குணமணி, காலஞ்சென்றவர்களான சோமஸ்கந்தன், புஸ்பராணி மற்றும் செல்வரத்தினம், திருச்செல்வம், காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், திலகவதி, பாலசுப்பிரமணியம், யோகநாதன், கமலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2025 சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
