திரு. தம்பு சிவலிங்கமூர்த்தி

தம்பு சிவலிங்கமூர்த்தி

மறைவு: 27 மே 2026

யாழ். இடைக்காடு செம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மஞ்சத்தடி முருகன் கோயிலடியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தம்பு சிவலிங்கமூர்த்தி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை  அன்று  சிவபதம்  அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தம்பதியினரின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமனும்,

வனஷா அவர்களின் அன்புக் கணவரும்,

கபில்ராஜ், சஜிந்தரன், கோகுல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எழிலரசி, சுபங்கரி, விதுனா ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2026 00:00)