திரு. தம்புசாமி சிவசுப்பிரமணியம்

(முன்னாள் உரிமையாளர் - சீப்சைட், கிளிநொச்சி)

தம்புசாமி சிவசுப்பிரமணியம்

மறைவு: 28 ஜூலை 2025

யாழ். வண்ணார்பண்ணை ஐந்து சந்தியைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்புசாமி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான க.பொ.தம்புசாமி (பிரபல வர்த்தகர் / ஸ்தாபகர் சீப்சைட்) - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மினிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரபாகரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிக்க தந்தையும்,

கார்த்திகா (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவநாதன், சறோஜினிதேவி (கனடா), கணேசலிங்கம், கமலாதேவி (கனடா), விமலாதேவி (பிரித்தானியா), ரவீந்திரன், சகுந்தலாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜெயகௌரி (பிரித்தானியா), ரோகினி, காலஞ்சென்றவர்களான வாமதேவன், கணேசராணி மற்றும் கதிர்காமத்தம்பி (கனடா), காலஞ்சென்ற சிறிதரன், நளாயினி, மகேசன் (கனடா), காலஞ்சென்ற தங்கராசா, சரோஜினி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கமலாதேவி, பாக்கியநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவசோதிலிங்கம், சகுந்தலாதேவி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-07-2025 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் உடலம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2025 04:00)