திரு. தம்பிராஜா சோதிராசா
தோற்றம்: 12 ஏப்ரல் 1933 - மறைவு: 24 டிசம்பர் 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, இல-35/1, லியனகே வீதி, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா சோதிராசா அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - லக்ஷ்மி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - தங்கரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேந்திரா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மங்கையற்கரசி, தினேசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிலாசினி, கௌசிகா, ரெவோ, ஜேடன் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,
விக்கினராஜா, காலஞ்சென்றவர்களான சிவமணி, சிரோண்மணி, பாலசிவராஜா, சிவபாலராஜா, சோமசுந்தரம், நாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-12-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
