திரு. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை

(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்)

தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை

தோற்றம்: 10 மே 1950 - மறைவு: 03 ஜூன் 2025

யாழ். துன்னாலை வடக்கு வெல்லிக்கம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வைகுண்டம் துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான விஜயசுந்தரம் - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஐங்கரன் (பொறியியலாளர் - ), சசீதரன் (கணக்காளர் - கனடா), அரவிந்தன் (பொறியியலாளர் - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பராணி (நியூசிலாந்து), செல்வானந்தன் (ஓய்வுநிலை பொலிஸ் அதிகாரி), காலஞ்சென்ற உதயகுமார் (பொலிஸ் பரிசோதகர்), சிவகுமார், காலஞ்சென்ற சுவேந்திரராசா ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

அக்‌ஷயா, ஜஸ்வந்த், பிரகன்யா, சுதன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-06-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் தாமரைக் குளத்தடி, சாவகச்சேரி வீதி, துன்னாலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் இயான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2025 04:00)