Mr. Thamotharampillai Sivapathasundaram

(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்)

Thamotharampillai Sivapathasundaram

Date of Birth: 08 February 1958 - Deceased: 12 December 2024

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், Epinay sur Seine - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை-இராஜலட்சுமிதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை -பரஞ்சோதி, நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன், சரண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணிதரன், சிவகெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவயோகேஸ்வரன் (யோகன்-பிரான்ஸ்), சிவகங்கை (கங்கா-பிரான்ஸ்), சிவறோஜினி (றோசா-இண்டன்), சிவசக்தி (சிவம்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

14-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை,

15-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை,

18-12-2024 புதன்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை, Funérarium des Joncherolles (95, rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-12-2024 வெள்ளிக்கிழமை காலை 8:45 மணி முதல் அஞ்சலியும், இறுதிக்கிரியையும் நடைபெற்று, நண்பகல் 12:15 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)