திரு தாமோதரம்பிள்ளை கனகசபை
தோற்றம்: 07 ஏப்ரல் 1950 - மறைவு: 29 ஜூன் 2025
யாழ். நரியிட்டான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி (ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம் உடுவில்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோன்மனி, காலஞ்சென்ற நடராஜா, கனகரத்தினம், கண்ணுத்துரை, துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரகுலசிங்கம், யோகநாயகி, சுவேந்திரமலர், லக்சுமிகாந்தி (ஓய்வு நிலை ஆசிரியை), சுபத்திரா, சத்தியதேவி (ஓய்வு நிலை ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஞானம் (ஓய்வு நிலை களஞ்சியப் பொறுப்பாளர் - வலி கிழக்கு ப.நோ.கூ. சங்கம், அச்சுவேலி) அவர்களின் அன்பு சகலனும்,
சேதுப்பிரியா (கிளை முகாமையாளர் - கூட்டுறவு ஆயுள் காப்புறுதி நிறுவனம்), குகன் (சாரதி - இலங்கை வங்கி யாழ்ப்பாணம்), ரோகினி (எழுதுவினைஞர் - பாரவூர்திகள் சங்கம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமார் (அருள்), நாகேஸ்வரன் (அஞ்சல் உதவியாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவிநாத், திஷானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
