Mr. Thamotharampillai Paramalingam

(முன்னாள் விஷேட சேவை உத்தியோகத்தர் கிராம சேவையாளர்-நெடுங்கேணி ஆசிகுளம்)

Thamotharampillai Paramalingam

Date of Birth: 14 October 1955 - Deceased: 08 November 2024

யாழ். நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (தெய்வேந்திரா தியேட்டர் உரிமையாளர்)- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கோகிலாதேவி (முன்னாள் மருத்துவ தாதி யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், தெய்வேந்திரம்பிள்ளை மற்றும் நடராசா, காலஞ்சென்ற கமலாவதி, புவனேஸ்வரி, யோகநாதன், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லம்மா, தவமணி, பத்மினி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் விஜயகுமாரி, மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை 5:00 – 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-11-2024 காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2024 05:00)