திரு. தாமோதரம்பிள்ளை சஞ்ஜீவராஜ்

(Proprietor - KST Impex, People's Park, Murugan Rice Mill & Hardware, Chavakachcheri)

தாமோதரம்பிள்ளை சஞ்ஜீவராஜ்

தோற்றம்: 29 மே 1959 - மறைவு: 02 ஜூலை 2025

யாழ். கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை சஞ்ஜீவராஜ் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - சிவஞானம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குகதாஸ் - பத்மராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்ஷரா (Royal Institute International), அவினாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. சிவராஜ், காலஞ்சென்ற தயாரதி, Dr. வாசுகி, தயானந்தராஜ், துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் (இல- 116/12, திம்பிரிகஸ்சாய வீதி, கொழும்பு -05) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2025 04:00)