திரு தாமோதரம்பிள்ளை செல்வவேலாயுதம்
மறைவு: 07 பெப்ரவரி 2026
யாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தை பிறப்பிடமாகவும், ஆதித்தன்வளவு கோப்பாய் தெற்கு கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை செல்வவேலாயுதம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னி தம்பதியினரின் பாசமிகு அன்பு மகனும், காலம் சென்ற மாணிக்கம் நாகம்மா தம்பதியினரின் பாசமிகு அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வாஜினி (பிரான்சு), சர்வசீலன் (பிரான்சு), சர்வலோஜினி, தனுசா (மாவீரர் லெப்ரினன் சுகந்தி) யோகறூபி, வசியசீலன் (பிரான்சு), காந்தலோயினி, லேனுகா (கனடா), அவர்களின் பாசமிகு அன்பு தந்தையும்,
மோகனராசா (பிரான்சு), சிவகுமாரி (பிரான்சு), பாஸ்கரன், ஜெயராசா, வனிதா (பிரான்சு), யோகநந்தன், பிரதிக்குமார் (கனடா), ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும்,
காலம்சென்ற சண்முகராஜா, காலம்சென்ற இராஜேஸ்வரி, காலம்சென்ற சின்னக்கிளி, ஆகியோரின் பாசமிகு அன்பு சகோதரனும்,
செல்வராணி, காலம்சென்ற மகாலிங்கம், சத்தியமலர், காலம்சென்ற மகாலிங்கம், நாகராசா (பிரான்சு), துரைராசா (பிரான்சு), இராசதுரை, யோகராசா (சுவிஸ்), அவர்களின் மைத்துனரும்,
கௌசிகன் (பிரான்சு), விதுசா (பிரான்சு), அகரன் (பிரான்சு),அறவன் (பிரான்சு), சாலுஜன், மதுசன் (பிரான்சு), சிந்துஜன் ,சவுரியா லுவின்சன் ,தர்சிகா ஆதிரன் (பிரான்சு) நர்திகா, விதுர்சிகா (கனடா),வித்தகன் (கனடா) அவர்களின் பாசமிகு அன்பு பேரனும்,
கரிசித் அவர்களின் பாசமிகு அன்புப் பூட்டனும் ஆவார்
அன்னார் எல்லை படையாக எல்லையில் சிறப்பாக செயற்பட்டதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பேருந்து நடத்துனரும் அதற்கு பின் உட்பட்ட காலத்தில் தமிழீழ நாட்டின் மூத்த தளபதி கேணல் கிட்டு பூங்காவின் நுழைவாயுள் காப்பாளராகவும், இடப்பெயர்வின் பின் வன்னியில் காந்தறூபன் அறிவுச்சோலை நுழைவாயுள் காப்பாளராகவும், பின் தமிழீழப் போக்குவரத்து பேருந்து நடத்துனர், பின் தமிழீழ போக்குவரத்து வன்னிமாவட்ட பேருந்து நேரக்கணிப்பாளராகவும் கடைமையாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின் 2009ம் ஆண்டின் வைகாசி 18 வன்னியில் இருந்து யாழ்பாணம் வந்த பிற்பாடு யாழ் பல்கலைக்கழக நுழைவாயுள் காப்பாளராகவும் கடமையாறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதஉடல் தகனக்கிரிகைக்காக இருபாலை கிழக்கு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
