Mr. Tampo Rajagopal

Tampo Rajagopal

Date of Birth: 05 February 1927 - Deceased: 04 September 2024

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை கலாபவனம், கொழும்பு, கனடா Toronto,  Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராஜகோபால் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முதலியார் தம்பு-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வ. சின்னத்தம்பி-ஞானம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவை சேர்ந்த ராஜா மதியழகன் (Roger), கலாவதி, யசோதரா, காலஞ்சென்ற அசோகன் மற்றும் செல்வகுமார், உமாசாந்தி, உமாசந்திரா, திருச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனடாவை சேர்ந்த புவனபாரதி, சிவனேசன், கஜேந்திரன், சுபாசினி, கண்ணதாசன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, அன்னமணி, மூத்ததம்பி, வண்ணமணி முருகேசு, செல்வமணி, ராஜரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காாலஞ்சென்ற தி.றோசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

கனடாவை சேர்ந்த சமந்தா, ஏமி, அபிராமி, லக்‌ஷ்மா, கிரிஷன், வினுஜா, அனுசன், ஜனவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற அன்னபூரணாதேவி விபுதராஜ் மற்றும் சி.ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற த.விபுதராஜ் மற்றும் சிவராணி ரவீந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  07-09-2024 சனிக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரை Chapel Ridge Funeral Home, Markham (8911 Woodbine Avenue MARKHAM, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-09-2024 காலை 7.00-9.15 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 9.45 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

***------------------------***

Visitation:-

Chapel Ridge Funeral Home, Markham

Saturday, September 7th, 2024 | 5:00 PM - 9:00 PM 

Second Visitation & Services:-

Sunday, September 8th, 2024 | 7.00 AM - 9:15. AM

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

MARKHAM, ON L3R 5G1

Cremation :-

will take place on the 8th of September, 2024 at 9.45 AM at:

 Highland Hills Crematorium 

12492 Woodbine Avenue, 

Gormley, ON

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2024 04:52)