Mr. Thanabalasingam Sinnathamby
(முன்னாள் மின் தொழில் நுட்பவியலாளர் காகித தொழிற்சாலை வாழைச்சேனை,முன்னாள்இயக்குனர் கொம்டெக்)
Date of Birth: 17 June 1942 - Deceased: 11 April 2026
யாழ் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் சுழிபுரம் மற்றும் பிரான்ஸ் போர்தோ (Bordeaux) ஆகிய இடங்களில் வசித்தவரும் இறுதியில் கொல்லங்கலட்டியை வாழ்விடமாகவுங்கொண்ட திருவாளர் தனபாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் நேற்று 11/04/2026 சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஸ்ர புத்திரனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. கிருஸ்ணபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி. ஞானேஸ்வரி (ஞானம் அக்கா) தனபாலசிங்கம் அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சின்னத்தம்பி, சரஸ்வதி வைத்தியலிங்கம் அவர்களின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவசிதம்பரம், இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவப்பிரகாசம், குகனேஸ்வரி, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் மற்றும் புஸ்பமலர் தம்பதியரின் சம்பந்தியும்,
பிரான்ஸ் போர்தோவில் (Bordeaux) வசிக்கும் திருவாளர் மயூரன் அவர்களின் அன்புத்தந்தையும்,
திருமதி. நளினி மயூரனின் (Bordeaux) அன்பு மாமனாரும்,
பவித்திரா, அஸ்வின், சஞ்சய் ஆகியோரின் அன்புப்பேரனும்,
திருவாளர் இரவீந்திரன் (TV ரவி) சுழிபுரம், மற்றும் திருமதி. மைதிலி குலேந்திரன் (கட்டார்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவுமாவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
