Mrs. Thanalauxmi Amma (Raasu)

Thanalauxmi Amma (Raasu)

Date of Birth: 23 November 1930 - Deceased: 29 September 2024

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி (திருவையாறு), நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி அம்மா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-விசாலாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான வேலணை மேற்கைச் சேர்ந்த ஜெகநாதபிள்ளை-பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை (வேலணை மேற்று, கிளிநொச்சி பிரபல வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வில்வமலர் (Productiom Worker-Netherland), கலையரசி (ஆசிரியை-கொழும்பு கலைமகள் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைச்செல்வன் (Retired Productiom Worker-Netherland), சுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மயூரி (Nursing Officer CSTH), பபிகரன் (MSc Cinstruction Project Management-London), கஸ்தூரி (Syrveying Undergraduat-Sabaragamuwa University), சாயித்தரன் (Auditor), சயன் (Entrepreneur and Architect-Netherland), தனயா (Spatial Designer and Entreprenenurship Undegraduate-Netherland) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யோகம்மா, காலஞ்சென்ற சேனாதிராசா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம் (கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துழர, அன்னலட்சுமி மற்றும் பாரதாதேவி (கனடா), யசோதரா தேவி (கனடா), காலஞ்சென்றவர்களான மகாதேவா, அன்னலட்சுமி, சந்திரசேகரம், சொர்ணகாந்தி மற்றும் புஷ்பகாந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2024 மதியம் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை Vlaanderenlaan 1, 9501 TJ Stadskanaal, Netherland இல் நடைபெற்று புகழுடல் Cersstraat 4a, 9502EA Stadskanaal, Netherland பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2024 04:00)