Mrs Thanaledchumy Thamotharampilai

Thanaledchumy Thamotharampilai

Deceased: 05 December 2019

யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தை பெரேரா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி தாமோதரம்பிள்ளை வியாழக்கிழமை (05-12-2019) கொழும்பில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற விவாகப்பதிவாளர் தாமோதரம்பிள்ளையின் அன்பு மனைவியும்,

சுகந்தி (கனடா), கௌரி(லண்டன்), நளினி(லண்டன்), பரன் (லண்டன்), தேவகி (கொழும்பு), பாமதி யோகநாதன் (கனடா), சபேசன் (அவுஸ்திரேலியா), பத்மநிதி (கனடா), சுபேந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தகுமார் (கனடா), கங்கா (லண்டன்), பாரதி (கொழும்பு - தினக்குரல்), யோகநாதன் (கனடா), திபாஹரி (அவுஸ்திரேலியா), தவராஜ் (கனடா), ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஈஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தேவி, சிவசெந்தில்நாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை (07-12-2019) பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையும், பின்னர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை II.00 மணியளவில் இடம்பெறும் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் பூதவுடல் கல்கிசை இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பாரதி
 
+94 77 730 4010,
+94 71 8609264.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 05:47)