Mrs. Thanaletchumi Latchumanan
Date of Birth: 30 May 1948 - Deceased: 25 June 2026
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலெட்சுமி இலட்சுமணன் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகளும்,
இலட்சுமணன் (குமாரவேல் கம்பனி, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரிகா (கொழும்பு), பிரேமலதா (கனடா). பிரபாகரன் (இயக்குனர் ராசா டீசல், யாழ்ப்பாணம்), கிருபாகரன் (வசந்தம் FM நிலையப் பொறுப்பதிகாரி), கருணாகரன் (குமாரவேல் கம்பனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவிபிரபாகரன், மதனராசா (மோகன்), சுஷானா லோகப்பிரபா, பபிதா ஆகியோரின் மாமியாரும்,
அஷ்வினி, யாதுஷன், பிரவீன், அபினகா, அபிஷயன், அபினாத், அனிஷன், கவிஷன், அக்ஷயா, ரூபந்தி,திலோஷன், அபினவ் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
மேக்னாவின் பூட்டியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, புவனேஷ்வரி, விசாலாட்சி, காலஞ்சென்ற இராசலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற நற்குணசிங்கம், கந்தசாமி, தங்ராசா, காலஞ்சென்ற நவரத்தினம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பத்மநாதன், முத்துலிங்கம் மற்றும் புஷ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-06-2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை லோட்டஸ் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பிரபாகரன்:- +94 71 427 1057
கிருபாகரன்:- 94 77 253 0865
கருணாகரன்:- +94 77 537 3201
www.tamilthakaval.org
