Mrs. Thanaletchumi Sellathurai
Date of Birth: 08 October 1946 - Deceased: 17 October 2025
இல-351, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு - 15 யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தனலெட்சுமி செல்லத்துரை அவர்கள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா செல்லத்துரை அவர்களின் அருமை மனைவியும்,
சுரேஷ், கணேஷ், சீதா, உமா, கீதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
தங்கசாமி (சவூதி அரேபியா), சிவா (ஜேர்மனி), தியாகராஜா (கனடா), நாகலட்சுமி (கௌஷி), ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவேதா (பிரித்தானியா), சங்கவி, ராகவி (கனடா), கௌதம், ரக்ஷனா, பிரியங்கா, சபரிஷ், வித்யாசினி, நிதுஷ், கிருஷிக், கிருஷான், மனிஷா ஆகியோரின் பாட்டியும்,
ஜோதி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, இந்திரா, காலஞ்சென்ற கந்தசாமி, பழனி (இந்தியா), பாலகிருஷ்ணன், முருகா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அளுத்மாவத்தை வீதி அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணயளவில் திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
