Mrs. Thanaletchumy Rajarathinam

Thanaletchumy Rajarathinam

Date of Birth: 02 January 1950 - Deceased: 22 February 2026

யாழ். இல- 54 சம்பியன் லேன், கொக்குவில் கிழக்கைப் பிறபிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி இராசரத்தினம் அவர்கள் 22-02-2026 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப் பிள்ளை - இராசலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான முத்தையா - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமளும்,

காலஞ்சென்ற புலவர்முத்து இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜயபாலினி (ஆசிரியை - யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), பிரணவன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேந்திரன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யஸ்விகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

லக்ஷ்மிதா, சியோன், சிபோசன், ரௌத்திரன் ஆகியோரின் பாசமிகு செல்வப் பேத்தியும்,

கைலாசபிள்ளை, ஜெயலட்சுமி, லோகநாதன், லோகேஸ்வரன், பாலசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-02-2026செவ்வாய்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் அவது இல்லத்தில் நடைபெற்று பின் பூதவுடல் தகனக்க கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2026 00:17)