Mrs. Thanaluxmy Sivagesamoorthy
Date of Birth: 23 July 1943 - Deceased: 28 July 2025
யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலஷ்மி சிவகணேசமூர்த்தி அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - நவரத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - அபிராமிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,
சிவகணேசமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனார்த்தனன், விஜயலட்சுமி, ராதாலட்சுமி, வத்ஸன், நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகந்தி, முகுந்தன், மனோகரன், ரோஸ், நேசகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சௌந்தர்யா, பவதாரணி, அபிலன், ஹனிசிகா, ஜோவினா, நிதின், நிலா, அபிமன், அபிதா, சுபரூபன், ஈசா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மகாலட்சுமி, சோமசேகரம், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் பொன்னம்பலம், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:30 - 4:30 மணி வரை Pinegrove Memorial Park (Kington St, Minchinbury NSW 2770, Australia) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
