திருமதி தனபாக்கியலெட்சுமி மகாலிங்கம்

தனபாக்கியலெட்சுமி மகாலிங்கம்

மறைவு: 02 ஜனவரி 2020

யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா புதிய வீட்டுத்திட்டம் நாகர இலுப்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனபாக்கியலெட்சுமி மகாலிங்கம் 02.01.2020 வியாழக்கிழமை வவுனியாவில் காலமானார்.


அன்னார் யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மார்க் கண்டு - அன்னமுத்து தம்பதிகளின் அருமை புதல்வியும்,

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலெட்சுமி, வரதராஜா, தியாகராஜா, செல்வராஜா, ஆனந்தராஜா, இராசநாயகம் மற்றும் பூபாக்கியலெட்சுமி, ராஜ ரஞ்சினி, ஜெயரஞ்சினி, ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

மயில்வாகனம் (கனடா), லோகநாதன் (வலம்புரி ஆசிரியர்), ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகாலெட்சுமி (இந்தியா), கமலவாணி, மங்களரூபி, மணவாளதாசன், கமலதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவீந்திரராஜா (இந்தியா), திருவருள்நாதன், புவனகலா (ஆசிரியை வ/பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலயம்), சிவஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்துஜா கேதீஸ்வரன்(பிரான்ஸ்), லாவண்ஜா ஜீவகரன் (பிரான்ஸ் ), சிந்துஜன் கோகிலவாணி (அமெரிக்கா), இந்துஜா நித்தியஸ்ரீதரா (நெதர்லாந்து), தனுஷிஜா சிவநேசன்(லண்டன்), சரண்ஜா தமிழ்ச்செல்வன் (நெதர்லாந்து), அனுஷிஜா சுகிர்தன் (பிரான்ஸ்), கஜேந்திஜா (மாணவ ஆசிரியை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), மேனுஜா, விதுஷா(மாணவி. வ/பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்), டனோஜன் (மாணவன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் அருமை பேர்த்தியும்,

விதுரன் (பிரான்ஸ்), மிதுலன்(பிரான்ஸ்), காவியா (பிரான்ஸ்), சஹிசன் (பிரான்ஸ்), அஹிசன் (பிரான்ஸ்), சஹானா(பிரான்ஸ்), சனாஜா(அமெரிக்கா), அனன்யா (நெதர்லாந்து), ஆதர்ஷ் (நெதர்லாந்து), ஆதேஷ் (நெதர்லாந்து), ஜஸ்மிகா (லண்டன்), அரிசன்(லண்டன்), சவேதா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலக்கம் 141, எல்லப்பர் மருதங்குளம் விவசாயக் கிராமத்தில் அமைந்துள்ள அன்னாரது மகனின் இல்லத்தில் இன்று  (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 4 மணியளவில் விவசாயக்கிராமம் எல்லப்பர் மருதங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: வடிவேலு திருவருள்நாதன் (மருமகன் - நயினாதீவு) 
 
+94 77 608 0557, +94 77 199 5871

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2020 03:08)