திருமதி. தவராஜசிங்கம் நாகேஸ்வரி

தவராஜசிங்கம் நாகேஸ்வரி

மறைவு: 07 மார்ச் 2026

யாழ். பருத்தித்துறையை  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் திருமதி. தவராஜசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலம்சென்ற கணபதிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலம்சென்ற தவராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற பிரபாகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனலட்சுமி, காலம்சென்ற வரதன்ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ஆவார் 

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:30 மணி வரை திக்கரை புலோலி வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோரியடி பருத்தித்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2026 01:34)