Mrs. Thandikainachi Kandasamy

(Retired Nurse, Jaffna Teaching Hospital)

Thandikainachi Kandasamy

Date of Birth: 14 March 1939 - Deceased: 21 October 2024

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தண்டிகைநாச்சி கந்தசாமி அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், நவரத்தினம்-செல்லம் தம்பதியினரின் அன்பு மகளும், வைரமுத்து-வள்ளிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

டிவாகரி (கனடா), றஜிதாகரி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாலிங்கம், சுதர்சன் (கனடா), மகாலிங்கம், நரேந்திரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிசன், டிதர்சன், கைலேசன், எமிசகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம், தங்கம், வைத்திலிங்கம் மற்றும் வள்ளியம்மை (கனடா), முத்தீஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பெரியதம்பி (லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அச்செழுவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 24-10-2024 வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் நடைபெற்று, பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2024 06:40)