திருமதி. தங்கமணி அம்பலம்

(இளைப்பாறிய ஆசிரியை - யாழ்.நெ/ம.வித்தியாலயம், யாழ்.நெ/பா/வித்தியாலயம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை)

தங்கமணி அம்பலம்

தோற்றம்: 29 செப்டம்பர் 1932 - மறைவு: 20 ஜூலை 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடா - Pickering ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமணி அம்பலம் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் - இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அம்பலம் (JP, முன்னாள் Chairman) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம், குமாரசாமி, இராசமணி மற்றும் மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுதாகரன், ஜெயந்தி (இலங்கை), நேமிநாதன் (கண்ணன்- ஜேர்மனி), நந்தினி (கனடா), சிவானந்தன் (பாபு- லண்டன்), சத்யவாணி (சத்யா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், குமுதா மற்றும் யாழினி (இலண்டன்), குணபாலன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷா, தயேந்திரா, ராகேந்திரா, ஜோபிகா, யாதவி, சச்சின், மிதுஷா, சுஜாதா, பிருந்தா, சுபாஸ்கரன், கில்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஷன், டினுஷன், சந்தோஷ், மேயா, லக்சிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 10:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2025 04:00)