Mrs. Thangamani Ladsumikanthan
Date of Birth: 31 January 1946 - Deceased: 21 May 2024
யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமணி இலட்சுமிகாந்தன் அவர்கள் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கட்டைப்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாதுரை இராசம்மா தம்பபதிகளின் ஏக புத்திரியும்,
திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை-கனகம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும்,
லயன் இலட்சுமிகாந்தன் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர், தலைவர்- கட்டப்பிராய் முத்துமாரி அம்மன், கட்டப்பிராய் சனசமூகநிலையம், இருபாலை தெற்கு முதியோர் சங்கம், செம்மணி இந்து மயானம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன் (கனடா), அமிழ்தினி (லண்டன்), கார்த்திகா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌஷிகா (கனடா), விமல்ராஜ் (லண்டன்), கோபிவதனன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிஷோபென், விரோஷன், டிஷானா (கனடா), காவியா, ஓவியா (லண்டன்), சாரங்கன், தீபனா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சண்முகானந்தம் (கனடா), பரமானந்தம் (ஐக்கிய அமெரிக்கா), ஈஸ்வரானந்தம் (கனடா), நவநீதராசா (ஜேர்மனி), ரவீந்திரகுமார் (டென்மார்க்), ஸ்ரீகாந்தன் (சுவிஸ்), ஜெயராஜா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வேந்திரகுமாரி (கனடா), ஸ்ரீதயா (ஐக்கிய அமெரிக்கா), நவரஞ்சினி (கனடா), ஜெகசோதி (ஜேர்மனி), காலஞ்சென்ற நளினி (டென்மார்க்), யோகா (சுவிஸ்), நளாயினி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 7.45 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து முற்பகல் 9.30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
