Mrs Thangammah Cheliah

Thangammah Cheliah

Deceased: 21 November 2019

கனகராஜன்குளம், மன்னகுளத்தைப் பிறப்பிடமாகவும் உக்கிளாங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா செல்லையா கடந்த (21.11.2019) வியாழக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

தர்மலிங்கம், சீதேவிப்பிள்ளை காலஞ்சென்றவர்களான அன்னம்மா லட்சுமி மற்றும் தியாகராஜா (முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற வீரவாகு செல்லையா (சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வீரவாகு கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணபாலசிங்கம் (காணி வெளிக்கள போதனாசிரியர்) மற்றும் பரமேஸ்வரி, தனபாலசிங்கம் (மாவட்ட செயலகம்-முல்லைத்தீவு), மாணிக்கநடராஜா (வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), ஜெயபாலசிங்கம் (அதிபர்-வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயம்), சூரியப்பிரகாசம் (லண்டன்), பாலகிருஷ்ணன் (அதிபர்-வவுனியா கனகராஜன்குளம் ஆரம்ப வித்தியாலயம்), கிரிஜா (ஆசிரியர்-புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), ஜெயநாயகம் (முன்னாள் முகாமையாளர் -ப.நோ.கூ.ச), பேரின்பவதனி (ஆசிரியர்- முஸ்லீம் மகாவித்தியாலயம் தண்ணீரூற்று), சுமதி, நளாயினி (ஆசிரியர் - இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), வையந்திமாலா (லண்டன்), வினோதினி (ஆசிரியர் கூமாங்குளம் சித்திவிநாகர் வித்தியாலயம்), ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்சன், தனோஜா, கேதரன், ஆத்மிகா, சுவப்னா, பவித்ரா. கபிஷ்னா, ஹர்ஷிதன், காவியன், இலக்கியன், கேசாத்மி, அபிராத்மி, சுடர்சி, யனுஸ்சி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப  10.00 மணியளவில் இல.238 C உக்கிளாங்குளம், வவுனியா இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தட்சணாங்குளம் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
+94 77 603 2068, +94 77 696 9153

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2019 04:36)