திருமதி. தங்கம்மா யோகநாதன்

தங்கம்மா யோகநாதன்

தோற்றம்: 18 ஜூன் 1939 - மறைவு: 19 மே 2025

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அத்தியடி, வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா யோகநாதன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - மீனாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வழக்கறிஞர் வீ.எஸ். கார்த்திகேசு - சிவஞானவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் (ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கா.யோ.கிரிதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலக்கியா, இலக்கணா ஆகியோரின் அப்பம்மாவும்,

ஹரிஷ், ஹரிணி ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்ற முத்துவேல், மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

***----------------***

Mrs. Thangammah Yoganathan, who was born in Athiyady, Jaffna and lived in Kodikamam, Athiyady and Vavuniya and last lived in Canada, passed away on Monday, May 19, 2025.

She was the eldest daughter of the late Vairamuththu Meenachippillai and the beloved daughter-in-law of late Advocate V.S. Karthigesu Sivagnanavathy,

Devoted wife of the late Yoganathan (Editor of Eezhanadu Newspaper),

Loving mother of K.Y.Kiritharan and Thamilini,

Beloved mother-in-law of Suresh and Eshwary,

Precious grandmother of Ilakkiya, Harish, Ilakgana, and Harini,

Beloved sister of the late Kanakambikai.

She was the in-law of the late Eswaradhas and Saraswathy, late Muthuvel and Maheswary.

We request our relatives, friends and families to accept this notice.

***------------------***

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-95-2025 திங்கட்கிழமை காலை [8:00 - 9:30] மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2025 04:00)