Mrs Thangaraja Susila
Date of Birth: 01 July 1957 - Deceased: 03 May 2024
பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், அக்கரப்பத்தனை, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராஜ் சுசிலா அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கவுண்டர் (ராஜாராம்-பண்டாரவளை) - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னான் - பாவாயி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தங்கராஜ் கவுண்டர் (Maxcity Plywood - Colombo / அக்கரப்பத்தனை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமுரளி, நவமுரளி (Maxcity Plywood - Colombo), சுரேன்பாபு (Chief Officer) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகையா (பண்டாரவளை), கணேஷன் (Lakmal Textiles), செல்வராஜ் (Lavanya Textiles), கமலம் (பண்டாரவளை), ஜெயலக்சுமி (கண்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியகலா, சுகாஷினி, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரிகித், ரிகித்தியா, ஜஷித், பரிக்ஷித் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற ஜெயராமன், திருமதி. இந்திராணி (Rani Stores - அக்கரபத்தனை), திரு. திருமதி இராமச்சந்திரன், ஜெயமலர் (ரஞ்சனாஸ் - அக்கரபத்தனை), திரு. திருமதி முத்துவேல் பத்தினியம்மாள் (கலஹா) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் வத்தளை இல்லத்தில் (#-105/15, 8th Lane, Alwis Town, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
