Mr. Thangarajah Kasilingam
(Retired Naval Officer)
Date of Birth: 20 November 1935 - Deceased: 29 January 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜா காசிலிங்கம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று தனது 90வது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சௌபாக்யவதி - தங்கராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,
செல்லையா - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அரியரத்தினம் (அரியம் - ஓய்வு பெற்ற ஆசிரியை யூனியன் கல்லூரி) அன்புக் கணவரும்,
சுரேஷ் (சுவிஸ்), ரமேஷ் (கொழும்பு), ஷகிலா (ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு), சொரூபா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சீதா லக்ஷ்மி (சுவிஸ்), சிவகுமாரன் (சிவா மல்டி ஷாப் - தையிட்டி), ராஜ மோகன் (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
ஜெனிற்றா, ஸ்தேவன், ஸ்கேரோன் லில்லி, டிலக்க்ஷன், நிலோஜன், நிசாங்கன்- சாத்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தங்கலட்சுமி (ஆச்சி - கனடா), காலஞ்சென்ற காந்தலீலா, சுகலீலா (குஞ்சு - கனடா), பாக்யலீலா (லீலா - நோர்வே) ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 30-01-2025 வியாழக்கிழமை மதியம் 1.00 - 8.00 மணி வரையும், 31-01-2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
