திரு. தங்கராஜப்பிள்ளை சுந்தரராஜா

தங்கராஜப்பிள்ளை சுந்தரராஜா

மறைவு: 08 ஜூலை 2025

இந்தியா - நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், இல-111/25, விஷ்ணு கோவில் குறுக்கு வீதி, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜாபிள்ளை சுந்தரராஜா அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜபிள்ளை - சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற S.K.P சுவாமி - செல்லம்மாள் (Black Wood Estate) தம்பதியினரின் மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரி (வீனா), பிரபு, பிரபாஸினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற நடராஜா, பாலமுரளி, கிருத்திகா ஆகியோரின் மாமனாரும்,

மீனாட்சி, சொண்க்ஷ, ஜிஷ்ணு, சீதாலட்சுமி ஆகியோரின் பப்பாவும்,

காலஞ்சென்ற ராமச்சந்திரன் (பரமேஸ்வரி), சந்திரசேகரன், தியாகலிங்கம் (பரமேஸ்வரி), மனோன்மணி (காலஞ்சென்ற கந்தையாபிள்ளை), அம்பிகா (நடராஜா), தேவகி (திருக்கேதீஸ்வரன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - செல்லம்மாள், கிருஷ்ணசாமிபிள்ளை - செல்லம்மாள், சிதம்பரம்பிள்ளை - சந்திரிக்கா ஆகியோரின் சம்பந்தியும், 

சிவராஜ் (சுமதி), பாலச்சந்திரன் (நிர்மலாதேவி) ஆகியோரின் மைத்துனரும்,

கௌரிமனோகரியின் மைத்துனரும்,

ஜெயராமனின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-07-2025 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் நிசல உயன பொது மயானத்தில் (இல-95, அன்டர்சன் ரோட், தெஹிவளை) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2025 04:00)