திருமதி. தங்கவேல்பிள்ளை முத்துலட்சுமி (ராணி)

தங்கவேல்பிள்ளை முத்துலட்சுமி (ராணி)

தோற்றம்: 25 பெப்ரவரி 1963 - மறைவு: 27 மே 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கண்டி - பலகொல்லையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கவேல்பிள்ளை முத்துலட்சுமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை - மரியாயி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ரெங்கசாமிப்பிள்ளை - தைலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிநாத், சரண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிந்துஜா, ரஜனிகாந்த் (ரமேஷ்) ஆகியோரின் மாமியாரும்,

பரமேஸ்வரி, புஸ்பராஜா, கமலவேணி (செல்வி - மலேசியா), பக்தசுந்தரி (சாந்தி) ஆகியோரின் சகோதரியும்,

செல்வராஜபிள்ளை (ஜெயஸ்ரீ டெக்ஸ்டைல், கொழும்பு-11) - நிர்மலா, காலஞ்சென்ற இராமசாமிபிள்ளை (பதுளை) - விஸ்வகாந்தி (காந்தா - கொழும்பு) தம்பதியினரின் சம்பந்தியும்,

அக்ஷட், அவ்யுக்ட் ஆகியோரின் அப்பாயியும், 

யஷ்னியா, ஜவேஷ் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2025 புதன்கிழமை காலை 7:30 மணி முதல் (இல - 92, பலகொல்ல, கெங்கல்ல) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பலகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2025 04:00)