Mrs. Thangavelpillai Muthuluxmy
Date of Birth: 25 February 1963 - Deceased: 27 May 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கண்டி - பலகொல்லையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கவேல்பிள்ளை முத்துலட்சுமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை - மரியாயி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ரெங்கசாமிப்பிள்ளை - தைலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், சரண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிந்துஜா, ரஜனிகாந்த் (ரமேஷ்) ஆகியோரின் மாமியாரும்,
பரமேஸ்வரி, புஸ்பராஜா, கமலவேணி (செல்வி - மலேசியா), பக்தசுந்தரி (சாந்தி) ஆகியோரின் சகோதரியும்,
செல்வராஜபிள்ளை (ஜெயஸ்ரீ டெக்ஸ்டைல், கொழும்பு-11) - நிர்மலா, காலஞ்சென்ற இராமசாமிபிள்ளை (பதுளை) - விஸ்வகாந்தி (காந்தா - கொழும்பு) தம்பதியினரின் சம்பந்தியும்,
அக்ஷட், அவ்யுக்ட் ஆகியோரின் அப்பாயியும்,
யஷ்னியா, ஜவேஷ் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2025 புதன்கிழமை காலை 7:30 மணி முதல் (இல - 92, பலகொல்ல, கெங்கல்ல) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பலகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
