Mr. Thanigasalam Mangaleswaran

(முன்னாள் முகாமையாளர் மகாராஜா நிறுவனம் SLON பிரிவு)

Thanigasalam Mangaleswaran

Date of Birth: 11 June 1940 - Deceased: 24 May 2024

யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் மங்களேஸ்வரன் அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - செல்வரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா - லட்சுமிப்பிள்ளை (நல்லூர்) தம்பதியினரின் மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

சங்கீதா, கோபிநாத் குமரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷன், ஹசினிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஸ்வின், தீபிகா, அய்லா ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,

ஞானேஸ்வரன், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன், ஆனந்தேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரவீந்திரன், ஹரிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

நவரட்ணராஜா, தெய்வநாயகி, சிவலிங்கம், கமலாதேவி, பாலசுப்பிரமணியம், பிறேமச்சந்திரன், காலஞ்சென்ற சோதிலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"A great soul is not around us anymore. RIP."
- V A Thiruvilangam (U K, 28/05/2024 21:04)
"Our heart-felt condolences to the family & Gnaneswaran."
- Rajasingham Ramanathan (Canada, 28/05/2024 12:43)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2024 04:00)