திரு. தணிகாசலம் ஞானேஸ்வரன்

(ஓய்வுபெற்ற தபால் அலுவலக சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர், கைதொழில் அமைச்சு ஆலோசகர்)

தணிகாசலம் ஞானேஸ்வரன்

தோற்றம்: 10 பெப்ரவரி 1942 - மறைவு: 23 செப்டம்பர் 2026

யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ - சொய்சாபுரவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தணிகாசலம் ஞானேஸ்வரன் அவர்கள் 26-09-2026 புதன்கிழமை அன்று இரவு அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - செல்வரத்தினம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr.சிவானந்தம் - அழகரட்ணம் தம்பதியினரின் மருமகனும்,

ஆனந்தசரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரனின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன் மற்றும் ஆனந்தேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரவீந்திரன், ஹரிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

கணேஷானந்தம், ஆனந்தலஷ்மி, ஆனந்த சரோஜினி, காலஞ்சென்றவர்களான ஷண்முகானந்தம், ஈஸ்வரானந்தம் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 732 6931
+94 77 303 9671

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 00:00)