Mr. Thanikasalam Kathirkamanathan
(ஓய்வுபெற்ற அதிபர்)
Date of Birth: 20 June 1933 - Deceased: 11 January 2026
யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham யை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. தணிகாசலம் கதிர்காமநாதன் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா - ஈஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜோதிவேல் (றமணா), கீதா, காலஞ்சென்ற சுதர்சன், வினிதா, சுஜாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வகுளமாலா, நந்தகுமார், கல்பனா, திருக்குமார், வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன், பிரணவி, சரணவி, அபிராம் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஆரபி, அபிரா, லிஷா, சஜின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மநாதன், இரகுநாதன், யோகதேவி மற்றும் உமாதேவி காலஞ்சென்ற பஞ்சநாதன் மற்றும் Dr.ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:15 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
