யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனிநாயகம் சின்னத்தம்பி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
சின்னத்தம்பி - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பஞ்சாட்சரம், பஞ்சலிங்கம், பஞ்சநாதன், விஜிதா, பஞ்சகரன், பஞ்சசிறி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, வாசுகி, சிவநேசமணி, சிவராஜா, கிருபாலினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சதாசிவம் மற்றும் தையலம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜன் – ஈவா, சுலோஜன், தனுஜா, இந்துஜன், யாதவன், பவித்திரா, ஆர்த்தி, ஆரவி, றவீனா, சாய்கா, சாய்தன், தருண், அக்ஷன், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மைலா, காய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-11-2025 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

