திருமதி. தங்கச்சியம்மா கந்தையா

தங்கச்சியம்மா கந்தையா

தோற்றம்: 20 டிசம்பர் 1929 - மறைவு: 15 ஆகஸ்ட் 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா வோன் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கச்சியம்மா கந்தையா அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரொறோன்ரோவில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை- செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் ,

காலஞ்சென்ற குருநாதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கந்தையா, செல்வரெட்ணம், சிவப்பிரகாசம், சின்னம்மா, ரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

கமலவேணி (கனடா), தங்கநாதன் (கனடா), கமலேந்திராணி (ஜேர்மனி), கமலாதேவி (கனடா), ரவீந்திரநாதன் (ஜேர்மனி), கமலநாதன் (ஜேர்மனி), கலைவாணி (கனடா ), கலாநிதி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவப்பிரகாசம், மகாலக்சுமி, கிருசுணமூர்த்தி, கலாநிதி, கிரியா, சிவரெட்ணம், லோகேசுவரன், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிநாத், பிரசாத், சந்திரகாந், ஜெகநாத், கிருபநாத், ரகுநாத், பவன்,

வினோத், சுகந்தி, அருந்தா, நிசாந்தி, நிவேதினி, வதனா, ரமணன், லம்போதரன், அர்யூன், அனந்தன், பிரியங்கா, அகிசன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

கிருசான், கெளசான், யீனிசா, சுயித், சுவீத்தா, சயித், கிரிசா, றைசா , வாகின், மானுசி, சாகீசன், சாயினி, சாய்சு, ஆசிகா, அசுவின், சுவேத்தா, அனீகா, அனிசுமிகா, மெக்சமில்லியாவின் பூட்டியுமாவார்.

அன்னாரின் புகழுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் 24-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, 11.00 மணியளவில் Highlands Hill Crematorium (12492 Woodbine Ave) என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2024 04:00)