Mr. Thankarajah Ponniah

(இளைப்பாறிய தபால் அத்தியட்சகர்- இலங்கை)

Thankarajah Ponniah

Date of Birth: 15 July 1929 - Deceased: 12 August 2025

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா- Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கராஜா பொன்னையா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், தமயந்தி, தர்ஷினி, Dr. கிரிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜயந்தி, நித்தியானந்தம், ஸ்ரீகந்தராஜா, தயாளினி ஆகியோரின் அருமை மாமனாரும்,

கெளதமி, மயூரன், காயத்ரி, ஸ்ரீரமணா, அர்ச்சனா, விசாகன், சுவாதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திவ்யன், ஆதவன், அஸ்வினி, நவின், வேலன், ஆதியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக  வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2025 04:00)