திருமதி. தனலட்சுமி சுப்பிரமணியம்

தனலட்சுமி சுப்பிரமணியம்

தோற்றம்: 29 டிசம்பர் 1938 - மறைவு: 05 செப்டம்பர் 2024

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர்-லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி, தம்பிராசா, தங்கம்மா மற்றும் பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் சகோதரியும்,

பாலகிருஷ்ணன் (ராசா), குமுதினி ஆகியோரின் அன்பு தாயாரும்,

ஹரப்பிரியா, ஜனார்த்தனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபக், கனிகா, நிஷாந்தன், மதூரிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 06-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையிலும், 07-09-2024  சனிக்கிழமை மூளாயில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று,பிற்பகல் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2024 04:00)