Mr. Tharmabalan Rajaratnam

Tharmabalan Rajaratnam

Date of Birth: 26 August 1948 - Deceased: 23 August 2026

யாழ். வலிகாமம் மேற்கு சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மபாலன் இராஜரட்ணம் அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் - சரஸ்வதி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மராஜ், மிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், ரேவதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இலக்கியன், மேனன், ஆருஷன், ஆதீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசரட்ணம், இலங்கரட்ணம், விநாயகமூர்த்தி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகோபால், வேலும்மயிலும், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

காலஞ்சென்ற சரோஜினி, சாந்தினி, சசிகலா, சச்சிதானந்தன், சாமினி, கீதாஞ்சலி, ஹெல்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார், காலஞ்சென்ற நரேஸ்குமார், நந்தினி ஆகியோரின் சித்தப்பாவும்,

டிலாணி, டிலக்ஸி, சரண்யா, கவிந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சஜீவன், சஞ்சயன், ரம்யா, நிரோஜ், நிவேத், தாரிணி, ஜனகன், டானியல்ராஜா, அலெக்ஸ்சந்தர்தீரன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-08-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 3:00 மணி வரையும், 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இராஜராஜேஸ்வரி (மனைவி):- +1 647 761 1677
+1 416 746 2801
தர்மராஜ் (மகன்):- +1 416 831 4546
மிதிலா (மகள்):- +1 647 868 0170
சுதாகரன் (மருமகன்):- +1 416 333 7050
ரேவதி (மருமகள்):- +1 416 902 1438

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2026 00:00)