திரு. தர்மகுலசிங்கம் ஆறுமுகம்
தோற்றம்: 01 பெப்ரவரி 1951 - மறைவு: 21 நவம்பர் 2024
யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மகுலசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்- இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
கிருஸ்ணபிள்ளை-காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புஸ்பகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்திரி (MBA, BSC & Eng), தர்சிகா (BSC), தினேஷ் (BSC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேசவன், றஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தவகுலசிங்கம், விஜயகுலசிங்கம் (சுவிஸ்), நடேசரட்ணசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணா, விசானி, கிற்றானா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோவிந்தராசன், லிங்கவதி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமணி அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:30 - 11:00மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
