Dr. Tharmalingam Muthulingam

(உரிமையாளர்- றோயல் மெடிக்கல் கிளினிக் H.P.வீதி, வவுனியா)

Tharmalingam Muthulingam

Date of Birth: 01 May 1946 - Deceased: 02 October 2024

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ் வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம்-நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன் (கணக்காளர்-இலண்டன்), ரமணன் (பொறியியலாளர்-இலண்டன்), தனுஷன் (வைத்தியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றோஜினி (கணக்காளர்-இலண்டன்), நிருஜா (ஆசிரியை-இலண்டன்), யாழினி (வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, கணேசலிங்கம், தங்கலட்சுமி மற்றும் அமிர்தலிங்கம், பரதலிங்கம், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ஞானலிங்கம், யோகலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், வனஜா, லலிதா, கமலபூசனி, தில்லைநாயகி, சிவமலர், இராசையா, பூபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், தெய்வானை, நடராசா, சிற்றம்பலம் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷரா, அக்‌ஷன், ஸ்பூர்த்தி, இனியன், யாதவ், கேஷவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2024 04:00)