பிரம்ம ஶ்ரீ. தர்மலிங்கம் பரராசசிங்கம்

(சமாதான நீதவான், நீர்வேலி காமாட்சி அம்மன் ஆலய தர்மகர்த்தா, முன்னாள் உரிமையாளர் - நீர்வேலி அம்பாள் ஹாட்வெயார்ஸ், சுன்னாகம் ஶ்ரீ அம்பாள் ரேட்ஸ்)

தர்மலிங்கம் பரராசசிங்கம்

தோற்றம்: 28 ஜூலை 1946 - மறைவு: 25 டிசம்பர் 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் பரராசசிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று மாலை தனது 78 வயதில் நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சமூகத் தொண்டன் தர்மலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லப்பா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அருமைச் சகோதரனும்,

தர்மகுமாரன் (ஆங்கில போதனாசிரியர் - தொழில்நுட்பக் கல்லூரி மன்னார், யாழ்ப்பாணம்), தர்மசங்கரன் (பொறுப்பதிகாரி - பொதுச் சுகாதாரப் பொறியியல் யாழ் மாநகர சபை), தர்மரூபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீபிரியா (முகாமைத்துவ உத்தியோகத்தர் - நல்லூரி பிரதேச சபை), வாலாம்பிகை (முன்னாள் உத்தியோகத்தர் IT Park), சாருஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,

நேருக்சன், சிஜிசன், வைசகி, கேசிகன், பராபரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நீர்வேலி வடக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முகவரி:-

"மிதிலா"

காமாட்சி அம்மன் கோவிலடி,

நீர்வேலி வடக்கு, நிர்வேலி.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2024 02:26)