Mr. Tharmalingam Sundralingam
(முன்னாள் ஆசிரியர் - கிளி/வட்டக்கச்சி ம.வி, கிளி/வன்னேரிக்குளம் ம.வி)
Date of Birth: 01 July 1949 - Deceased: 27 January 2025
யாழ்.நெடுந்தீவை பிறப்பிடமாகவும் , வவுனியா - திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் , கிளிநொச்சி 86/3 திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 27-01-2025 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் (முன்னாள் கிராமசபை உறுப்பினர்) - சொர்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வேலாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலம்மா (ஓய்வு பெற்ற பிரதம எழூதுவினைஞர் - கிளிநொச்சி மாவட்ட செயலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரலோஜினி, நிஷாமினி, துஷாலினி (ஆசிரியை - மு/ சுதந்திரபுரம் தமிழ் ம.வி), சியாமா, மோகனவேணி, காண்டீபன் (ஆசிரியர் - வ/ ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம், சிதம்பரபுரம், வவுனியா நகர சபை - முன்னாள் உறுப்பினர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிதரன், ஞானதேசிகன், தஜிபரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கரைதுறைப்பற்று), தனராஜி, பத்மகௌரி (ஆசிரியை - வ/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற காசிநாதன், தங்கலட்சுமி, சொர்ணலட்சுமி, லிங்கநாதன், யோகநாதன், காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பரமேஸ்வரநாதன், ரதிதேவி, கோசலாதேவி, பிள்ளைநாயகம், காலஞ்சென்ற பாலசுந்தரம், தர்மரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபிவர்ணன், கனிமொழி, சாதனா, வாசகன், மஞ்சரி, தருண், அக்ஷரா, சஷ்மிகா, பிரமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
* 30-01-2025 அன்று கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இருந்து அன்னாரின் இல்லத்திற்கு செல்ல காலை 7:00 மணி முதல் பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
