Mr. Tharmalingam Tharmasenthurvasan

(Owner, Tharmalingam Service Station -Vavuniya)

Tharmalingam Tharmasenthurvasan

Date of Birth: 30 April 1969 - Deceased: 18 April 2023

சக வகுப்புத்தோழி சிவாஜினியின் (89 O/L 92 A/L பாமா - France) பாசமிகு கணவர் திரு. தர்மலிங்கம் தர்மசெந்தூர்வாசன் (Tharmalingam Service Station உருமையாளர் - வவுனியா) அவர்கள் 18.04.2023 செவ்வாய்கிழமையன்று இலங்கையில் இறைபாதம் அடைந்தார்.

வவுனியா இறம்பைக்குளம் நாகபூஷணி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னார், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆங்கில ஆசிரியர் தர்மலிங்கம் தர்மரட்டினம், சண்முகவடிவு தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
தென்மயிலை கட்டுவனைச் சேர்ந்த நவரட்டினம், ராசமணி தம்பதியினரின் மருமகனும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவி சகவகுப்புத்தோழி சிவாஜினியின் (89 O/L 92 A/L பாமா - பிரான்ஸ்) பாசமிகு கணவரும்,
 
வருண்,அருண், அருணாவின் (பிரான்ஸ்) பாசமிகு தந்தையும்,
 
தர்மசிறி (வவுனியா), தர்மாந்தினியின் (கனடா) பாசமிகு சகோதரனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான சிவயோகன் (சிவா 83 O/L 86 A/L ), சிவகணநாதன் (கண்ணன் 85 O/L 88 A/L), சிவகௌரி (கௌரி 87 O/L 90 A/L) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
 
அன்னாரின் பூதவுடல் வவுனியா இறம்பைக்குளம் நாகபூஷணி அம்மன் கோவிலடி இல் உள்ள அவரது வீட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
Bala Yazhkovan

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2023 00:30)