திருமதி. தர்மலிங்கம் அன்னலட்சுமி

தர்மலிங்கம் அன்னலட்சுமி

தோற்றம்: 13 மார்ச் 1940 - மறைவு: 21 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இல- 115, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் (முன்னாள் வர்த்தகர் - K.A வேலுப்பிள்ளை ஸ்டோர்ஸ், பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலலிதா, விஜயலலிதா, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமாரன் (ஓய்வுநிலை முகாமையாளர் - இலங்கை வங்கி), தயானந்தா (ஓய்வுநிலை பிரதேச செயலாளர்), சிவதர்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவதர்சினி, தயானந்தன், சிவரஞ்சனி, சிவரூபன், கோபிநாத, சாம்பவி, கணநாதன், சுஜீவன், சாரங்கன், ஆரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷாருஜன், யுவிஷன், திவானுஜன், சிவநாத், சங்கவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2025 04:00)